நாட்டில் வேலையின்மை இரட்டிப்பாகியுள்ளது- ப.சிதம்பரம்
நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பாஜகவை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணி உருவாக்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், பிரபல தனியார் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியதாவது:
10 ஆண்டுகள் மோடி ஆட்சியில் தலையாய பிரச்சனையாக இருப்பது வேலையின்மை உள்ளது. நாட்டில் வேலையின்மை இரட்டிப்பாகியுள்ளது. வேலை இல்லாதவர்களின் 83 சதவீதம் பேர் இளைஞர்கள் பட்டதாரிகள் 42 சதவீதம் பேருக்கும், ஐஐடி படித்த 30 சதவீதம் பேருக்கும் வேலையில்லை என்று தெரிவித்துள்ளார்.