வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (18:07 IST)

''2 லட்சம் குழந்தைகளை கடத்திய ரஷ்யா-'' உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

Volodymyr Zelenskyy
உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பு 100 வது நாளை நெருங்கிக் கொண்டுள்ள நிலையில், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து பொருளாதாரத் தடைகள் விதித்து வருகிறது.

ஆனால், இதனால் தங்கள் நாட்டிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என ரஸ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த போரினால் தானிய விளைச்சல் அதிகமுள்ள உக்ரைனில் தானிய பஞ்சம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்போரினால் இதுவரை 243 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்றும் 446 பேர் காயம் அடைந்துள்ளதாக  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நாட்டு மக்களிடன் உரையாற்றியதாவது:

மேலும், ரஷியா, உக்ரைனில் இருந்து,  சுமார் 2 லட்சம் குழந்தைகளைக் கடத்தி உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தக் குற்ற  நடவடிக்கையில் ஈடுபடுவர்களை உக்ரைன் தண்டிக்கும்.  உக்ரைனை யாராலும் கைப்பற்ற முடியாது.  நாங்கள் ஒருபோதும் சரணடைய மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.