திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (13:19 IST)

இந்த பல்கலை.யில் தொலைதூர கல்வி சேராதீங்க! – யூஜிசி எச்சரிக்கை!

அண்ணாமலை பல்கலைகழகத்தில் தொலைதூர கல்விகளில் சேர வேண்டாம் என யூஜிசி எச்சரித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பல்கலைகழகங்களில் தொலைதூர கல்வி, ஆன்லைன் கல்வி போன்றவற்றை நடத்த யூஜிசி அனுமதி வழங்கி வருகிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் தொலைதூர கல்விக்கான அட்மிசன் பணிகள் நடந்த நிலையில் தொலைதூர கல்விக்கான அனுமதியை பெறவில்லை என யூஜிசி தெரிவித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு வரையிலுமே அண்ணாமலை பல்கலைகழகம் அனுமதி பெற்றிருந்ததாக தெரிவித்துள்ள யூஜிசி, 2015-16 முதல் அண்ணாமலை பல்கலைகழகத்தால் வழன்கப்பட்ட தொலைதூர படிப்பு சான்றிதழ்கள் செல்லாது என்றும், மாணவர்கள் யாரும் தொலைதூர மற்றும் திறந்தநிலை படிப்பில் இந்த பல்கலைகழகத்தில் சேர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.