திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 2 ஜூலை 2020 (19:55 IST)

இதுபோன்ற மிருகங்களுக்கு மன்னிப்பே கிடையாது: 7 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை குறித்து உதயநிதி

ஒரு பக்கம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை விவகாரத்தில் நீதி வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த கொடூரத்தை செய்த மிருகங்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பொங்கி எழுந்து வருகின்றனர்
 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி ஜெயப்பிரியா என்பவர் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மர்மமான முறையில் மாயமானார். அவரை அவரது பெற்றோர்கள் தேடிய நிலையில் எங்கும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் நிலையத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இருந்தபோது கன்மாய் அருகே உள்ள முட்புதரில் சிறுமியின் இறந்த உடல் இருப்பதை கண்டுபிடித்தனர். சிறுமியின்  உடல் முழுவதும் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது 
 
இந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், ராஜா ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள்தான் இந்த கொடூரத்தை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பொங்கி எழுந்தனர்
 
இந்த நிலையில் நடிகர் உதயநிதி இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளனர். இதற்கு காரணமான மிருகங்களுக்கு மன்னிப்பே கிடையாது. இதுபோன்ற கொடூர செயல்களில் இனி எவரும் ஈடுபடக்கூடாது என்பதை உறுதிசெய்யும் வகையில் விரைவான சட்டநடவடிக்கை தேவை.சிறுமியின் குடும்பத்துக்கு என் இரங்கல்