செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 22 டிசம்பர் 2020 (09:33 IST)

சசிகலா வெளிய வந்ததும் எடப்பாடியாருக்கு ஆப்பு! – உதயநிதி உறுதி!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள உதயநிதி ஸ்டாலின் “சசிகலா வெளியே வந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆப்பு வைப்பார்” என கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக இப்போதே தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுபயண பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிதம்பரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் “கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜகவை ஓட ஓட விரட்டி அடித்து துரத்தினீர்கள். அதே போல இந்த தேர்தலிலும் அவர்களை ஓட ஓட விரட்டி 234 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதிமுகவில் ஊழல் மலிந்து விட்டது. அதிமுக தனது எஜமானர்களான பாஜக, சசிகலாவுக்கே உண்மையாக இல்லை. சசிக்கலா சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆப்பு வைப்பார். நீங்கள் மொத்த அதிமுகவுக்கு தேர்தலில் ஆப்பு வைக்க வேண்டும்” என பேசியுள்ளார்.