1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Udhayanithi stalin got wushes from vijayakanth

வெற்றிக்கு பிறகு விஜயகாந்தை சந்தித்த உதயநிதி! – நேரில் வாழ்த்து பெற்றார்!

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வென்ற நிலையில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் சேப்பாக்கம் – திருவெல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இந்நிலையில் வெற்றிக்கு பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, அதிமுக கூட்டணியிலிருந்து விலகி அமமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. இந்நிலையில் விஜயகாந்தை நேரில் சந்தித்த உதயநிதி அவரது வாழ்த்துகளை பெற்றுள்ளார்.
About Writer
Prasanth Karthick