செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 20 ஜனவரி 2021 (18:31 IST)

தேர்தல் நேர வசூலை தொடங்கிவிட்டார் தெர்மகோல் விஞ்ஞானி: உதயநிதி டுவீட்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்திலும் அரசியல் கருத்துக்களை கிண்டலாகவும் ஆவேசமாகவும் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சற்றுமுன் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது;
 
பத்தாண்டுகள் அடித்த கொள்ளை போதாது என தேர்தல் நேர வசூலை தொடங்கிவிட்டார் தெர்மகோல் விஞ்ஞானி. கூட்டுறவுத்துறை பணிகளை நிரப்ப ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை கலக்‌ஷன் நடக்கிறது. இந்த தொகையை யார் வசூலித்து கொடுப்பதென உள்ளூர் அதிமுகவினரிடையே நடக்கும் போட்டிகளுக்கும் பஞ்சமில்லை
 
கொண்டு வந்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்க வக்கற்று, வேலைக்காக ஏங்கி நிற்கும் இளைஞர்களை சுரண்டி அதில் வரும் காசில் வாக்குகளை வாங்க நினைப்பது குரூரத்தின் உச்சம். கொள்ளையடிப்பதை தவிர்த்து ஆட்சியின் இறுதி காலத்திலாவது மக்களுக்கு ஏதாவது நல்லது செய்துவிட்டு செல்லுங்கள் அடிமைகளே