1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (08:52 IST)

உங்க அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை! முதல்வரை கலாய்த்த உதயநிதி

வரும் மக்களவை தேர்தலில் முதல்முறையாக திமுக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி களமிறங்கியுள்ளார். முதல்வர், துணை முதல்வர், மோடி என அனனவரையும் காரசாரமாக அவர் தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சனம் செய்து வருகிறார்.
 
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசுகையில், 'என்னுடைய அரசியல் அனுபவ வயது கூட உதயநிதியின் வயது இல்லை. அவர் விமர்சனம் செய்வதையெல்லாம் நான் கண்டுகொள்ள போவதில்லை என்று கூறினார்.
 
முதல்வரின் இந்த பேச்சுக்கு நடிகர் உதயநிதி டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிலாக பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழுவது போன்று உள்ளது. இந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டிய உதயநிதி, 'ஆமாம் ! உங்க அளவுக்கு அனுபவம் இல்லை!' என்று கலாய்த்துள்ளார்.
 
உதயநிதியின் இந்த டுவீட்டுக்கு பலவகையான கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது. பெரும்பாலான கமெண்டுக்கள் உதயநிதியை வாழ்த்தியே பதிவாகி வருவதால் திமுகவினர் குஷியில் உள்ளனர்.