கட்சியில் சீனியர்களை ஓரம் கட்டும் உதயநிதி ஸ்டாலின்??
சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞரணியினருக்கு அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்க உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் என தெரிகிறது.
கடலூர் மாவட்டம், வடலூரில் திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துக்கொண்ட உதயநிதி, பின்வருமாறு பேசினார்...
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் இளைஞர்களை தான் கட்சியில புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். எனவே, தகுதியான இளைஞர்களை சேர்ப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் நம் பணி சிறப்பாக இருந்தது. அதன் பயனாக உள்ளாட்சி தேர்தலில் 60% வெற்றியை பெற்றுள்ளோம்.
உள்ளாட்சி தேர்தலில் இளைஞரணிக்கு குறிப்பிட்ட அளவே போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞரணியினருக்கு அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்க கட்சி தலைமையிடம் வலியுறுத்துவேன் என தெரிவித்துள்ளார்.
உதயநிதியின் இந்த பேச்சு கட்சியில் உள்ள சீனியர்களை ஓரம் கட்டும் வகையில் இருப்பதாக சில பேச்சுக்கள் எழுந்துள்ளது.