ரஜினியை மீண்டும் விமர்சனம் செய்த உதயநிதி: என்ன சொன்னார் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவ்வப்போது அரசியல் ரீதியாக விமர்சனம் செய்து வரும் திமுக தலைவர் மகனும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது மீண்டும் அவரை விமர்சனம் செய்துள்ளார்
சமீபத்தில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தபோது ’தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி ஏற்பட வேண்டும் என்றும், அதுதான் மக்களின் விருப்பம் என்றும் கூறினார். இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் ’தமிழகத்தில் திராவிட கட்சிகள் அல்லாத ஆட்சிதான் வரவேண்டும் என மக்கள் விரும்புவதாக ரஜினிகாந்த் கூறியது அவருடைய சொந்த கருத்து என்றும் மக்கள் இதனை கூறவில்லை என்றும் கூறினார்
மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் கூட காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும் கூறி தமிழக அரசு குழப்பத்தில் உள்ளதாகவும் அவர் விமர்சனம் செய்தார். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தமிழக அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்