1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 16 மார்ச் 2021 (17:35 IST)

உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு ?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கியது. அதில் மனுவை தாக்கல் செய்த முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது சொத்துமதிப்புகளை பதிவு செய்தனர். அதில்  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் தனது சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். 
 
‘கையிருப்பு தொகையாக ரூ.75 ஆயிரமும், மனைவி கிருத்திகாவின் கையிருப்பாக ரூ.50 ஆயிரமும் இருக்கிறது. தனது பெயரில் ரூ.21 கோடியே 13 லட்சத்து 9 ஆயிரத்து 650 மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், மனைவி பெயரில் ரூ.1 கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 222 மதிப்புள்ள அசையும் சொத்துகளும் உள்ளது.
 
இதேபோல ரூ.6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552 மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளது’ என்றும் அவர்  கூறியுள்ளார்.