வியாழன், 22 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (09:02 IST)

அமைச்சர் பதவிக்கு அடி? மெளனம் கலைத்த உதயநிதி; கழகத்தினர் அப்செட்!

அமைச்சர் பதவிக்கு அடி? மெளனம் கலைத்த உதயநிதி; கழகத்தினர் அப்செட்!
பொறுப்பு அளிக்க கோரி தலைமைக்கு யாரும் தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம் என்று  உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை. 

 
கடந்த ஏப்ரல் மாதல் தமிழகத்தில் தேர்தல் நடந்தது. இதில், ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. ஸ்டாலின் முதல்வர் பொறுபேற்று ஆட்சி நடத்தி வருகிறார். எதிர்க்கட்சியான அதிமுக ஆளும் திமுக அரசின் மீது விமர்சனங்களும் குற்றச்சாட்டும் கூறி வருகின்றனர். இருப்பினும் முதல்வர் ஸ்டாலின் தனது செயல்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறார்.
 
இந்நிலையில், எம்.எல்.ஏ உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னரே தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று திருச்சியில் திமுகவினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றினர்.
அமைச்சர் பதவிக்கு அடி? மெளனம் கலைத்த உதயநிதி; கழகத்தினர் அப்செட்!
இதனைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க கோரி தலைமைக்கு யாரும் தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டங்களில் எனக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திருப்பது குறித்து அறிந்தேன். என் தொடர் பணிகள் மீதும், முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நான் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.
அமைச்சர் பதவிக்கு அடி? மெளனம் கலைத்த உதயநிதி; கழகத்தினர் அப்செட்!
என் மீதுள்ள அன்பின் காரணமாக, எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் என உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும் தலைமையும் நன்கறியும் என்பதை தொண்டர்கள் நாம் அனைவரும் அறிவோம்.
 
எனவே, பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் வழியில் வந்த நம் கழகத் தலைவர் வழங்கும் கட்டளையின் வழியில் நின்று கழகத்தை வளர்த்தெடுக்க நாளும் தொடர்ந்து உழைத்திடுவோம். மக்கள் பணியாற்றிடுவோம். கழகத்துக்கும் கழக அரசுக்கும் மகத்தான புகழைச் சேர்த்திடுவோம் என குறிப்பிட்டுள்ளார். 
 
உதயநிதியின் இந்த திடீர் அறிக்கையால் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிய கழகத்தினர் அப்செட்டில் இருப்பதாக தகவல்.