1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 27 மே 2022 (19:36 IST)

என் தலைவனை விமர்சித்தால் மிதிப்போம்: டி.ஆர்.பி ராஜா டுவிட்

trb raja1
என் தலைவனை விமர்சித்தால் மிதிப்போம்: டி.ஆர்.பி ராஜா டுவிட்
எனது தலைவனை விமர்சனம் செய்தால் அடிப்போம் சாரி மிதிப்போம் என திமுக எம்எல்ஏ மற்றும் திமுகவின் ஐடி விங் தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் திமுகவின் ஐடி விங் தலைவராக டிஆர்பி ராஜா தேர்வு செய்யப்பட்டார் என்பதும் அவரது தலைமையின் கீழ் ஐடி விங்சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முதல்வர் முக ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் டிஆர்பி ராஜா பதிவு செய்துள்ள ட்வீட்டில் என் தலைவனை விமர்சனம் செய்தால் அடிப்போம் அல்லது மிதிப்போம் என்று பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, அவர் பதிவு செய்த டுவிட் இதோ
 
 
கருத்து சொல்லுங்கள் ,
மாற்று கருத்து சொல்லுங்கள்...
இல்ல நாங்க சொல்றது பொய் என்று கூட வாதாடுங்கள்... நாகரீகமாக பதில் வரும்.
 
ஆனா என் தலைவன விமர்சிக்க உங்க எவனுக்கும் தகுதியில்ல.
மீறி பேசுனா உங்கப்பனாவே இருந்தாலும் அடிப்போம்...
 
Sorry... மிதிப்போம்.