ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (14:33 IST)

10 ஆண்டுகள் கழித்து திமுக என்ற கட்சியே இருக்காது: அண்ணாமலை

Annamalai
10 ஆண்டுகள் கழித்து திமுக என்ற கட்சியே இருக்காது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திமுக கட்சியை ஒரு குடும்பமே நடத்த வேண்டும் என்று நினைக்கிறது என்றும் அந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே காட்சியும் பதவியில் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் என்றும் வேறு யாருமே வளரக்கூடாது என்று நினைக்கின்றனர் என்றும் பேட்டி ஒன்றில் அண்ணாமலை கூறியுள்ளார்
 
 இதன் காரணமாக  பத்தாண்டுகள் கழித்து திமுக என்ற கட்சியே இருக்காது என்றும் தற்போது இந்திய அளவில் காங்கிரஸ் எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே அளவு தான் தமிழகத்தில் திமுக கட்சி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒரு குடும்பமே கட்சியை கபளீகரம் செய்து விட்டதால் திமுகவினர்களே அந்த கட்சியை உடைக்க தயங்க மாட்டார்கள் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்