வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2024 (13:35 IST)

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார தேதி அறிவிப்பு..!

udhayanidhi
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளன. 
 
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீரென காலமான நிலையில் அந்த தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 
 
இதன்படி ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் விக்கிரவாண்டி தேர்தலில் திமுகவை வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா ஆகியோர் உட்பட 29 பேர் போட்டியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜூலை 6, 7, 8 ஆகிய மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் உள்ளூர் திமுக நிர்வாகிகள் இந்த பிரச்சார ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது 
 
Edited by Mahendran