வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 14 ஜூன் 2023 (07:52 IST)

பாஜக அரசின் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது: செந்தில் பாலாஜியை சந்தித்த பின் உதயநிதி பேட்டி

மத்திய பாஜக அரசின் உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் திமுக அஞ்சாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். 
 
மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு அலுவலகம் ஆகியவற்றில் நேற்று அமலாக்க துறையினர் அதிரடியாக சோதனை செய்த நிலையில் நள்ளிரவில் திடீரென அவரை கைது செய்தனர். 
 
இதனை அடுத்து செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்திக்க மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் உதயநிதி அதன் பின் செய்தியாளர்களிடம் சந்தித்தார். 
 
அப்போது மத்திய பாஜக அரசின் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் திமுக அஞ்சாது என்றும் மிசாவையே பார்த்த திமுக சட்டத்தின் மூலம் அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva