வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (17:41 IST)

பிரதமர் மோடியுடம் அமைச்சர் உதயநிதி சந்திப்பு; முக்கிய கோரிக்கை வைத்ததாக தகவல்..!

udhayanidhi modi
பிரதமர் மோடியுடம் அமைச்சர் உதயநிதி சந்திப்பு; முக்கிய கோரிக்கை வைத்ததாக தகவல்..!
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில் இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் அமைச்சர் உதயநிதி சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளன. அமைச்சரான பின் முதல் முறையாக டெல்லி சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியதாகவும் இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டில் நடத்துவது குறித்த கோரிக்கைகளையும் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஏற்கனவே மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கிரிராஜ் ஆகியோர்கள் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் தற்போது பிரதமரையும் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva