வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 27 பிப்ரவரி 2023 (17:55 IST)

சாலையோர டீக்கடையில் டீ குடித்த ஜெர்மனி பிரதமர்: வைரல் புகைப்படங்கள்..!

germany
சாலையோர டீக்கடையில் டீ குடித்த ஜெர்மனி பிரதமர்: வைரல் புகைப்படங்கள்..!
ஜெர்மன் அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் அவர்கள் இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசு முறை சுற்று பயணமாக வந்துள்ள நிலையில் இன்று அவர் டெல்லியில் சாலை ஓர டீக்கடையில் டீ குடித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் என்பதும் ஜெர்மனி அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் ஆகிய இருவரும் இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்த உள்ளனர் என்பதும் இதனை அடுத்து நாளை பெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜெர்மன் அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் அதிபர் பெங்களூர் வருகை ஒட்டி பெங்களூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் டெல்லியில் இன்று ஜெர்மன் அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரை நிறுத்த சொன்னார். 
 
அதன்பினர் அவர் சாலை ஓரத்தில் இருந்த டீக்கடையில் டீ அருந்தினார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva