கட்சிக்கே உழைக்காமல் பதவி பெற்றாரா உதயநிதி?
திமுகவின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உழைப்பை தராமல் தலைவரின் வாரிசு என்ற ஒரே தகுதியை மட்டுமே வைத்து உதயநிதி பதவியை பெற்றுவிட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி பத்திரிகையாளர்கள் சிலரும் கருத்து கூறி வருகின்றனர்.
வாரிசு அரசியல் என்றால் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், பிஜு பட்நாயக் ஆகியோர் வரவில்லையா? என்று திமுகவினர் பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் ராகுல்காந்தி காங்கிரஸ் துணைத்தலைவர் பதவியை பெறுவதற்கு முன்னர் சுமார் 15 ஆண்டு காலம் கட்சிக்காக ஆக்கபூர்வமான பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். அதேபோல் அகிலேஷ் யாதவ்வும், பிஜூ பட்நாயக்கும் ஒரே ஆண்டில் கட்சி தலைவர் பதவியை பெறவில்லை. இருவரும் சுமார் 15 ஆண்டுகாலம் கட்சிக்காக உழைத்த பின்னரே பதவியை பெற்றனர்.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு அரசியலுக்கு நுழைந்த உதயநிதி, ஒரே ஒரு தேர்தலை மட்டுமே சந்தித்து அந்த வெற்றியும் தன்னால் மட்டுமே வந்தது என்று கூறிக்கொண்டு பதவியை பெற்றது அக்கட்சியின் அடிமட்ட தொண்டனின் உழைப்பை இழிவுபடுத்துவதாக என்று முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.