வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2024 (23:05 IST)

பாசிச பாஜகவையும், அவர்களின் எடுபிடி அதிமுகவையும் வீழ்த்திடுவோம்- அமைச்சர் உதயநிதி,

udhay
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ் நட்டில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவில், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன.
 
திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று, அமைச்சர் உதயநிதி, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சகோதரர் ச.முரசொலிக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு ஒரத்தநாடு பகுதியில் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
 
''தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வேட்பாளர் சகோதரர் ச.முரசொலி அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு ஒரத்தநாடு பகுதியில் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டோம். கலைஞரின் மூத்தப்பிள்ளையாம் 'முரசொலி'-யையும் அண்ணா கண்ட உதயசூரியன் சின்னத்தையும் என்றும் பிரிக்க முடியாது என்பதற்கேற்ப, நம்முடைய வேட்பாளர் முரசொலி அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என்று உரையாற்றினோம். வேளாண் விரோத பாசிச பாஜகவையும், அவர்களின் எடுபிடி அதிமுகவையும் தேர்தல் களத்தில் வீழ்த்திடுவோம்.''என்று தெரிவித்துள்ளார்.