புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2019 (10:18 IST)

ஸ்டாலின் - உதயநிதி திடீர் மோதலா? திமுகவில் பரபரப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளில் திமுக கூட்டணியை தோல்வியடைந்தது அக்கட்சியை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 
இந்த தோல்வி குறித்து ஆலோசனை செய்ய சமீபத்தில் முக ஸ்டாலின் இல்லத்தில் உதயநிதி உள்பட ஒருசில திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டதாகவும், இந்த கூட்டத்தில் உதயநிதி காரசாரமாக பேசியதாகவும் கூறப்படுகிறது
 
குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பொன்முடி அவர்களின் ஆலோசனையின் பேரில்தான் வெளியூர்க்காரர் ஒருவர் வேட்பாளராக விக்கிரவாண்டி தொகுதி அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் பொருப்பை பொன்முடி முழுமையாக ஏற்கவில்லை என்றும், இந்த தோல்வி முழுக்க முழுக்க சீனியர்களின் அலட்சியத்தால்தான் ஏற்பட்டதாகவும் உதயநிதி பேசியதாக கூறப்படுகிறது 
 
அதேபோல் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினருக்கு திமுகவினர் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என தனக்கு தகவல் வந்திருப்பதாகவும், இதே நிலை நீடித்தால் வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுகவிற்கு சிக்கல்தான் என்றும், சீனியர்களுக்கு மரியாதை கொடுப்பது அவசியம் தான், ஆனால் அதே நேரத்தில் அவர்கள் தேர்தல் பணிகளை சரியாக கவனிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் உதயநிதி ஆவேசமாக கூறியதாகவும் கூறப்படுகிறது 
 
உதயநிதியின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்ட முக ஸ்டாலின், இனி அடுத்தகட்ட நடவடிக்கையாக அதிரடியாக சில முடிவை எடுப்பார் என்று கூறப்படுகிறது