செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (23:48 IST)

காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை காப்பாற்றிய பொதுமக்கள் !!! வைரலாகும் வீடியோ

ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை அங்குள்ள பொதுமக்கள் மீட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தருமபுரி மாவட்டம் பொன்னகரம் பக்கத்தில் உள்ள ஒகேனக்கல் என்ற பகுதியில் உள்ள மெயினருவியில் நீர்வரத்து அதிகம் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனர்.ஆனால் ஆபத்தான ஒரு சில இடங்களில் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தாலும் சிலர் அங்கு குளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆலம்பாடி என்ற பகுதியில் ஒர் இளைஞர் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட்டார். அவர் தன்னைக் காப்பாற்றும்படி கூறவே சிலர் உடனடியாகச் செயல்பட்டு, இளைஞரை காப்பாற்றினர்.

மக்கள் துணிச்சலுடன் போராடி இளைஞரை காப்பாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.