திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 1 ஜூலை 2020 (15:47 IST)

’’420 வேலை செய்த உதயநிதி…’’ சட்டம் தன் கடமையை செய்யும்- அமைச்சர் குற்றச்சாட்டு

சமீபத்தில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இரு வணிகர்களும் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் உள்ள ஜெயராஜ் மற்றும்  பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் ஒரு மாவட்டம் விட்டு இன்னொரு மாவட்டத்திற்குச் செல்லும் போது பெற வேண்டிய  இ – பாஸ் பெறவில்லை என குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாவது : உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இன்றி பயணம் செய்துள்ளார். ஸ்டாலின்  இ- பாஸ் வைத்து தூத்துக்குடி சென்றா எனில் அதை டுவிட்டரில் வெளியிடலாமே ஏன் அதை வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார்.
மேலும் , உதயநிதி இ – பாஸ் பெறாமல் 420 வேலை செய்து தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். இதுகுறித்து சட்டம் தன் கடமையைச் செய்யும் என கூறியுள்ளார்.