வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 29 ஜூன் 2020 (16:26 IST)

தமிழக துணைமுதல்வரின் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இதுவரை 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரொனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக துணைமுதல்வர்  பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஒ.ராஜாவுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, மதுரையில் தனியார் மருத்துவமனை கட்டுப்பாட்டிலுள்ள விடுதியில் தனிமை முகாமில் பன்னீர் செலவத்தின் சகோதரர் ஓ.ராஜா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர், தேனி மாவட்ட ஆவின் தலைவராகவும் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.