திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2023 (10:35 IST)

சென்னையில் இன்று அதிகாலை அடுத்தடுத்து சாலை விபத்துகள்: பொதுமக்கள் அதிர்ச்சி..!

Accident
சென்னையில் இன்று அதிகாலை 2 வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் இன்று அதிகாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு கார் கவிழ்ந்ததால், அதிலிருந்த இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் திருவான்மியூர் ஈசிஆர் சாலையில் அதிவேகமாக வந்த கார் மற்றும் லாரி மோதி தூய்மை பணியாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
சென்னையில் விபத்துக்களை கட்டுப்படுத்த புதிய வேக கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்து இரண்டு சாலை விபத்துக்கள் ஏற்பட்டு ஒரு உயிர் பலியாக உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran