1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 21 ஜனவரி 2019 (16:38 IST)

விராலி மலை ஜல்லிக்கட்டு – கின்னஸ் சாதனை - இருவர் பலி…

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜனவரி 20 ஆம் தேதி  நடைபெற்ற  ஜல்லிக்கட்டுப்போட்டியில் இருவர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 

முதன் முதலாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜனவரி 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கின்னஸ் சாதனையில் இடம்பெற செய்யும் முயற்சியில் நிர்வாகக்குழு ஈடுபட்டது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1350 காளைகள் பங்கேற்றன. இந்த காளைகளை அடக்க 420 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். மேலும் ஜல்லிக்கட்டைப் பார்வையிட ஒரு லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

மற்ற ஊர்களில் நடக்கும் போட்டிகளை விட அதிகளவில் காளைகள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொண்டதால் இந்த போட்டியைக் கின்னஸ் சாதனையில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சியில் விராலிமலை ஜல்லிக்கட்டு நிர்வாகக் குழு ஈடுபட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மேற்பார்வையில் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.

கின்னஸ் சாதனைக் குழுவில் இருந்து வந்த அதிகாரிகள் இந்த போட்டியை ஆய்வு செய்து இதை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற செய்ய ஒப்புக்கொண்டனர்.

சிறப்பாக நடந்து முடிந்த இந்த போட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காணவந்த இருவர் காளைகள் முட்டி உயிரிழந்ததாக ஜல்லிக்கட்டு நிர்வாகக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.