செவ்வாய், 12 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 21 ஜனவரி 2019 (16:29 IST)

தடையை மீறிச் சென்ற இளைஞர் சிங்கத்திற்கு இரையான சோகம்...

பஞ்சாப்  மாநிலம் சண்டிகரில் அமைந்துள்ளது சட்பிர் வனவிலங்கு சரணாலயம்.  இந்த வன விலங்கு சரணாலயத்தைச் சுற்றி பெரிய மதிற்சுவர் எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் 30 அடி உயரம் உயரம் கொண்ட இச்சுவரைத் தாண்டி நேற்று ஒரு நபர் உள்ளே நடமாடியபடி இருந்தார்.
 
அதேசமயம் அங்கு  வளர்க்கப்பட்டு வந்த 4 சிங்கங்கள் இரண்டு அங்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதைக் கவனிக்காத அந்த அந்த நபர் சரணாலயத்தில் உலவிக்கொண்டிருந்தார்.
 
அப்போது சில்பா மற்றும் யுவராஜ் என்ற இரு சிங்கங்களும் அந்த மனிதரை கடித்துக் கொண்டிருந்தது. அப்பகுதியில்   பயணிகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்ற ஓட்டுநர் அம்மனிதரை சிங்கத்திடம் இருந்து காப்பாற்ற  வாகனத்தில் ஹார்ன் ஒலியை எழுப்பினார்.
 
அதனையடுத்து சிங்கங்கள் இரண்டும்  அம்மனிதரை விட்டுச் சென்றுவிட்டது. சிங்கத்தால் கடிபட்டவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றும், இது குறித்து போலிஸார் மேலும் விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.