ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 18 செப்டம்பர் 2021 (10:11 IST)

பெரியாரை இழிவுபடுத்தி போஸ்டர்… பாரத்சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது!

நேற்று தந்தை பெரியாரை இழிவு செய்யும் விதமாக போஸ்டர் ஒட்டிய இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

நேற்று தமிழகம் முழுவதும் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டது. திமுக அரசு அலுவலர்கள் பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக உறுதிமொழி எடுக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பெரியார் குறித்து இழிவுப்படுத்தும் விதமாகவும் நோட்டீஸ் வெளியிட்டும் சுவரொட்டிகள் ஒட்டிய பாரத் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.