செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (12:01 IST)

Spiderman and Thor டிசைனில் டி.வி.எஸ். என் டார்க்!

ஸ்பைடர் மேன் மற்றும் தோர் டிசைன் கொண்ட வண்ணத்தில் டி.வி.எஸ் என் டார்க் மாடலை டி.வி.எஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. 

 
டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவின் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு மோட்டார் சைக்கிள் நிறுவனமாகும். இது 2018 இந்தியாவின் மூன்றாவது பெரிய மோட்டார் சைக்கிள் நிறுவனமாகும். இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் டி.வி.எஸ். 
 
இந்நிலையில் இந்நிறுவனம் ஸ்பைடர் மேன் மற்றும் தோர் டிசைன் கொண்ட வண்ணத்தில் டி.வி.எஸ் என் டார்க் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்குவாட் எடிஷனாக வந்துள்ளது இது. இதன் விலை ரூபாய் 84,850 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டி.வி.எஸ். என் டார்க் அம்சங்கள்: 
 
முன் பக்கம் 220 மிமீ டிஸ்க் பிரேக், பெட்டல் டிஸ்க் கொண்ட ஸ்கூட்டர், இடவசதி 22 லிட்டர். கார்கள் போல் என்டார்க்கில் டிரைவிங் மோடுகள் - ஸ்ட்ரீட் மோடு, ஸ்போர்ட் மோடு, டிஜிட்டல் கடிகாரம், ஸ்போர்ட்ஸ் மோடில் லேப் டைமரும் கொடுத்திருக்கிறார்கள். 0-60 டைமர்கூட உண்டு, இரண்டு ட்ரிப் மீட்டர்கள். சீட்டுக்கு அடியில் மொபைல் சார்ஜிங் போர்டு, பிரேக் லாக் க்ளாம்ப், இன்ஜின் கில் ஸ்விட்ச்கொண்ட முதல் ஸ்கூட்டர் என்டார்க்.