புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (13:43 IST)

தவெக கொடியை ஏற்றக்கூடாது: தொண்டர்களுக்கு தலைமை கடும் எச்சரிக்கை..!

அனுமதி இல்லாமல் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை ஏற்ற கூடாது என தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் தொடங்கிய நிலையில் சமீபத்தில் இந்த கட்சியின் கொடியை அவர் அறிமுகம் செய்தார். இரண்டு போர் யானைகள் மற்றும் வாகை மலருடன் கூடிய இந்த கொடி கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு வரும் நிலையில் மதுரையில் 50 அடி உயரத்தில் கொடிக்கம்பம் நட்டி  கொடியேற்ற அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை இது குறித்து கூறிய போது அனுமதி இன்றி எங்கும் கொடியேற்றக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறும் கட்சி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் தலைமை கூறியுள்ளதால் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva