1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk first conference police give permission

தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி: திட்டமிட்ட அதே தேதியில் நடைபெறும்..!

Vijay Flag
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி நடத்தும் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகவும், எனவே திட்டமிட்டபடி செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி என்ற பகுதியில் நடைபெற திட்டமிட்ட நிலையில் அதற்காக அனுமதி கேட்டு காவல்துறையிடம் விண்ணப்பம் செய்யப்பட்டது. இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த காவல்துறையினர் 21 கேள்விகள் கேட்டதாகவும் அதற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த விளக்கத்தை காவல்துறையினர் ஏற்றுக் கொண்டதாகவும் சற்றுமுன் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது, இதனால் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்,

Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம்: 2 தலைமை ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு