ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 25 செப்டம்பர் 2024 (15:56 IST)

தவெகவின் முதல் மாநாடு: நாளை கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை..!

Vijay Flag
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அடுத்த மாதம் நடைபெற இருப்பதை அடுத்து, நாளை கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் விஜய் ஆலோசனை செய்ய இருப்பதாகவும், நாளை மதியம் 3 மணிக்கு பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களின் எண்ணிக்கை, வாகனங்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு மற்றும் காவல்துறை அனுமதி பெறுவது உட்பட பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தவெக மாநாட்டிற்கு  அனுமதி வழங்க மறுப்பு என வெளியான செய்தி தவறு என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Edited by Siva