வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (15:35 IST)

வேட்டையன் ரிலீஸ் நாளில் ஓடிடியில் ரிலீஸாகிறதா விஜய்யின் ‘கோட்’ திரைப்படம்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

இதில் பல நடிகர்களின் கேமியோக்களை ஆங்காங்கே வைத்திருந்தார் வெங்கட்பிரபு. இதில் உச்சபட்சமாக கோட் படத்தில் விஜயகாந்த் ஏ ஐ மூலமாக திரும்பக் கொண்டுவரப்பட்டது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இனிய சர்ப்ரைஸாக அமைந்தது. படம் பார்த்த விஜயகாந்த் ரசிகர்கள், நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் ஆதர்ச நாயகனை திரையில் பார்த்து மகிழ்ந்தார்கள்.  இப்படி பல சுவாரஸ்ய அம்சங்கள் இருந்ததால் கலவையான விமர்சனங்கள் வந்தும்  படம்  இதுவரை 400  கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. படம் அக்டோபர் 10 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நாளில்தான் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.