தமிழன்னை, சேரர், சோழர், பாண்டியர்.. விஜய் கட்சி மாநாட்டில் கட்-அவுட்டுக்கள்..!
தளபதி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த மாநாட்டு திடலில் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
முதல் கட்டமாக காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோர்களின் கட்-அவுட்டுக்கள் வைக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியவர்களின் கட்-அவுட்டுக்கள் வைக்கப்பட்டன. தற்போது சேர சோழ, பாண்டியர்கள் மற்றும் தமிழன்னை கட்-அவுட்டுக்கள் வைக்கப்பட்டு இருப்பதை பார்க்கும்போது, இது ஒரு வித்தியாசமான கட்சியாக தெரிகிறது.
பொதுவாக, அதிமுக மற்றும் திமுக மாநாட்டில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட கட்சி தலைவர்களின் கட்-அவுட்டுக்கள் மட்டுமே இருக்கும். ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் மட்டும்தான் தமிழன்னை முதல் அஞ்சலை அம்மாள் வரை கட்-அவுட்டுக்கள் வைக்கப்பட்டு இருப்பதை பார்க்கும்போது, நடுநிலை வாக்காளர்கள் மிகப்பெரிய அளவில் விஜய் கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran