திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2023 (18:47 IST)

10 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை?

abuse
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கட்சி  ஆட்சி நடைபெற்று வருகிறது.

இம்மாநிலத்தின் வடக்கு தினஜ்பூர் மாவட்டம் கலியகஞ்ச் என்ற பகுதியில் வசிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவி  கடந்த வியாழனன்று டியூசன் சென்றிருந்த நிலையில் வீடு திரும்பவில்லை.

மாணவி வீடுதிரும்பாததால், அக்கம் பக்கம் மற்றும் சக மாணவியர் வீடுகளில் தேடிப் பார்த்தும் அவரைக் காணவில்லை என்பதால், போலீசில் புகாரளித்தனர். இத்குறித்து போலீஸார் விசாரித்தனர்.

இதனையடுத்து, வெள்ளிக்கிழமை கலியகஞ்ச் பகுதியில் ஒருகுளத்தின் அருகே சிறுமி பிணமாக மீட்கப்ப்ட்டார்., அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டிருந்தது.

இந்த  நிலியில், அப்பகுதியைச் சேர்ந்த ஜாவித் அக்தர் என்பவர், தன் நண்பர்ளுடன் சேர்ந்து சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக  மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.