1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 மே 2018 (09:30 IST)

தூத்துகுடி கலவரம் குறித்து குவியும் வழக்குகள்: இன்று மொத்தமாக விசாரணை

ஸ்டெர்லைட் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்து தூத்துகுடி நகரமே கடந்த மூன்று நாட்களாக பதட்டத்தில் இருந்தது. இந்த போராட்டத்தில் விஷமிகள் ஊடுருவி கலவரத்தை தூண்டியதாகவும், அதனால் வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் காவல்துறையினர் விளக்கம் அளித்தனர். இருப்பினும் காவல்துறையினர்களின் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்குகள் குவிந்து வருகின்றது.
 
அதேபோல் தூத்துகுடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது குறித்தும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மேலும் தென் மண்டல ஐஜி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் சமூக நல ஆர்வலர்கள் வழக்கறிஞர்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொது நலன் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
 
இந்த நிலையில் தூத்துகுடி சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் மொத்தமாக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்குகளில் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்