செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (12:39 IST)

அதிமுகவில் இணைகிறாரா புகழேந்தி?? எடப்பாடியோடு சந்திப்பு!

அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி , டிடிவி தினகரனை விமர்சித்து பேசியதாக போன் கால் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் செந்தில்பாலாஜி, தங்க.தமிழ்செல்வன் வரிசையில் புகழேந்தியும் அமமுகவிலிருந்து விலக போகிறார் என்று பேச்சு அடிப்பட்டது.

இதுகுறித்து பேசிய டிடிவி தினகரன் விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் இன்று திடீரென சேலத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார் புகழேந்தி.

இதனால் கூடிய சீக்கிரமே புகழேந்தி தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவிம் சென்று இணைய போகிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது. ஆனால் இதுகுறித்து புகழேந்தியோ, அமமுகவோ அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.