1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (17:09 IST)

அம்மா உணவகங்களில் அதிகார அத்துமீறல்கள்? டிடிவி தினகரன் கேள்வி

அதிகார அத்துமீறல்கள் நடைபெறுவதற்கு திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? என டிடிவி தினகரன் கேள்வி. 

 
முன்னதாக அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 600-க்கும் அதிகமான அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே திருவேற்காடு அம்மா உணவகத்திலிருந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் படம் திமுகவினரால் அகற்றப்பட்டுள்ளது போலும்.
 
இந்நிலையில் இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அம்மா உணவகத்திலிருந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் படம் திமுகவினரால் அகற்றப்பட்டது கண்டனத்திற்குரியது. அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வது சரியானதல்ல. 
 
‘அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்’ என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் கூறிய பிறகும் இத்தகைய அதிகார அத்துமீறல்கள் நடைபெறுவதற்கு திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.