1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஜூன் 2024 (15:09 IST)

நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்; 2026ல் எங்களுக்கே வெற்றி: டிடிவி தினகரன் பேட்டி

2024 மக்களவைத் தேர்தலில் அதிக வாக்கு சதவிகிதத்தை பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துகள் என்று மானாமதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
அளித்துள்ளார். 
 
மேலும் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு சதவிகிதம் கடுமையாக குறைந்துள்ளது என்றும், 2011-ல் திமுக தோல்வி அடைந்தது போல், 2026 தேர்தலிலும் தோல்வி அடையும் என்றும், திமுக ஆட்சிக்கு பாடம் புகட்டும் விதமாக தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கும் என்றும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கடினமாக உழைத்து தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்” என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
 
நாம் தமிழர் கட்சி இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணியில் இல்லாத நிலையில் 2026 ஆம் ஆண்டு விஜய் கட்சியுடன் அனேகமாக கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து கூறியதை அடுத்து ஒரு புதிய கூட்டணி அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
Edited by Mahendran