1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 13 ஜூன் 2024 (07:37 IST)

மீண்டும் இணைகிறதா சுந்தர் சி வடிவேலு கூட்டணி?

சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சுந்தர் சி கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று அந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அரண்மனை 4 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஏன் ஒரு சிறியப் படம் பண்ணவேண்டும் என சுந்தர் சி யோசிப்பதாகவும், அதனால்தான் இப்போதைக்கு கலகலப்பு 3 படம் கிடப்பில் போடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் சுந்தர் சி அடுத்து ஒரு பிரம்மாண்டமான படத்தை மாஸ் ஹீரோ ஒருவருடன் தொடங்குவார் என சொல்லப்படுறது.

இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள மற்றொரு தகவலின் படி இயக்குனர் சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் அவரே முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவரோடு வடிவேலு மீண்டும் இந்த படத்தில் இணைய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் இணைந்து பணியாற்றிய வின்னர், லண்டன், ரெண்டு, கிரி, தலைநகரம் மற்றும் நகரம் 2 ஆகிய படங்கள் குறிப்பிடத்தகுந்த படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.