தொடர்புடைய செய்திகள்
- ஜெயலலிதா சிகிச்சை குறித்து பொய் அறிக்கை தான் வெளியிட்டோம்: உண்மையை ஒப்புக்கொண்ட பிரதாப் ரெட்டி!
- நடிகர் விஜய் தந்தை மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு!
- ஜெயலலிதா ஆபத்தான நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார்: உண்மையை உடைக்கும் பிரதாப் ரெட்டி
- போருக்கு வராமல் இருக்கும் ரஜினி: பால்டாயில் குடித்த ரசிகர்!
- ஜெயலலிதா-சோபன் பாபு மகள்?: டிஎன்ஏ ஆதாரம் எடுக்க அம்ருதா தீவிரம்!
டிடிவி தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்: யாருடைய கணிப்பு தெரியுமா?
ஆர்கே நகரில் இடைத்தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் பல கருத்துக்கணிப்புகள் வெளிவந்தவாறு உள்ளது. சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு ஒன்று தினகரன் வெற்றி பெறுவார் என கூறியது.
ஆர்கே நகர் தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி கடைசி நேரத்தில் யார் பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம். இதனால் அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் களத்தில் சுழன்று வருகின்றனர்.
இந்நிலையில் டிடிவி தினகரன் அணியில் உள்ள பிரபல நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரபல தமிழ் வார பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் டிடிவி தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும், அவர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனவும் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
