வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஜூலை 2018 (19:02 IST)

முதல்வரைதான் எதிர்த்தோம் அதிமுகவை அல்ல; எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்பு வாதம்

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டாலும் அதிமுக அரசுக்கு அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டோம் என்று டிடிவி தினகரன் தரப்பி வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

 
அதிமுகவில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தற்போது மூன்றாவது நீதிபதி நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் டிடிவி தினகரன் தரப்பு வாதம் இன்றுடன் முடிந்தது.
 
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டாலும் அதிமுக அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டோம் . எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாக கூறுவது தவறு என்று மூத்த வழகறிஞர் ராமன் வாதிட்டுள்ளார்.
 
நாளை மற்றும் வெள்ளிக்கிழமை சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுவார். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இந்த வாரமே வெளியாகும் என்று அதிமுக வட்டாரத்தில் பலரும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.