வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 மே 2023 (12:13 IST)

அமித்ஷா சொல்லியும் எடப்பாடி பழனிச்சாமி கேட்கவில்லை: டிடிவி தினகரன் பேட்டி..!

ttv dinakaran
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அமித்ஷா சொல்லியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அதிமுக கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டார் என டிடிவி தினகரன் பேட்டி ஒன்றியம் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் சொல்ல மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் சந்தித்தது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். 
 
திமுக தான் எங்களுக்கு எப்போதும் பொது எதிரி ஆனால் அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி எங்கள் இருவருக்கும் துரோகி என்று அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். 
 
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என அமித்ஷா தெரிவித்தார். அமமுகவை கூட்டணியில் சேர்க்காவிட்டால் 80 தொகுதிகளில் பின்னடைவு ஏற்படும் என்றும் பலர் அறிவுரை கூறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக எங்கள் கட்சியை அதிமுக கூட்டணியில் சேர்க்கவில்லை என்று கூறினார்.
 
Edited by Siva