திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 18 ஜூலை 2018 (18:45 IST)

கல்வீச்சுக்கு பயந்தவனா? தினகரன் பரபரப்பு பேட்டி!

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் இன்று ஆா்.கே.நகா் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டைக்கு நலதிட்ட உதவிகளை வழங்க சென்றார். 
 
அவர் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக அவரது ஆதரவாளா்கள் அப்பகுதிக்கு காரில் வந்தனா். அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில், தினகரன் ஆதரவாளர்கள் வந்த கார்கல் மீது கற்கள் வீசப்பட்டது. 
 
இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டாலும், அவர்களாக அதனை தடுக்க முடியவில்லை. எனவே காவல்துறையினர் அவர்களை அடித்து துறத்தினர். 
 
அதன் பின்னர் அங்கு வந்த தினகரன், நலதிட்ட உதவிகளை செய்த பின்னர் பின்வருமாறு பேசினர். தோ்தலில் தோற்ற விரக்தியில் அதிமுகவினா் தொகுதிக்குள் வரவிடாமல் தடுக்கின்றனா். 
 
கல்வீச்சுக்கு பயந்து தொகுதிக்குள் வராமல் இருப்பவன் நான் அல்ல. மேலும் எனக்கு காவல்துறை பாதுகாப்பு தேவையில்லை. தொண்டா்களின் பாதுகாப்பே போதுமானது என்று தெரிவித்தார்.