திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2017 (13:52 IST)

மீண்டும் தொப்பி அணியும் தினகரன் - ஆர்.கே.நகரில் போட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.


 
வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
அதேபோல், வேட்பு மனு தாக்கல் நவம்பர் 27ம் தேதி தொடங்கி, டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 5ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலினை நடைபெறும். மனுவை வாபஸ் பெறுவதற்கு டிசம்பர் 7ம் தேதி கெடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 24ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி வாய்ப்பு அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 
 
அந்நிலையில், ஆர்.கே.நகரில் நான் மீண்டும் போட்டியிடுவேன் என ஏற்கனவே தினகரன் அறிவித்துவிட்ட நிலையில், இதுபற்றி, தனது ஆதரவாளர்களுடன் நாளை தினகரன் ஆலோசனை செய்ய உள்ளார். 
 
இநிலையில், இந்த தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என டிடிவி  அணியின் அவைத்தலைவர் அன்பழகன் இன்று கூறியுள்ளார். மேலும், திருப்பூரியில் நடைபெற்ற விழாவில் பேசிய தினகரன் “ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள்  முடிவெடுத்துள்ளனர். இரட்டை இலையை மீட்க, இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது” என தெரிவிவித்துள்ளார்.

எனவே, ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.