வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 மே 2020 (15:29 IST)

தி.மு.க.வினரோடு அதிமுக கள்ள கூட்டணி: டிடிவி பகீர் டிவிட்!

தி.மு.க.வினரோடு கள்ள கூட்டணி அமைத்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவதில் ஆளுங்கட்சியினர் தீவிரமாக இருப்பதாக டிடிவி தினகரன் டிவிட் போட்டுள்ளார். 

 
அவர் இது குறித்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த இரண்டாண்டுகளைப் போல இந்தாண்டும் தண்ணீர் வரும் கடைசி நேரத்தில் ஏனோ, தானோவென்று அரைகுறையாக தூர்வாரினால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டாவின் கடைமடை பாசனப் பகுதிகள் வரை முழுமையாக சென்றடையாது என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
 
மேட்டூர் அணை  திறக்கப்பட உள்ள நிலையில்  இந்த ஆண்டாவது கடைமடை பாசனப்பகுதி வரை தண்ணீரைக் கொண்டு செல்வதற்கான பணிகளில் அக்கறை காட்டாமல், தி.மு.க.வினரோடு கள்ள கூட்டணி அமைத்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவதில் ஆளுங்கட்சியினர் தீவிரமாக இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.