சட்டசிக்கலில் கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பதவி ? நடவடிக்கை எடுக்குமா அ.தி.மு.க தலைமை ?
கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் மாற்றுக்கட்சி நிர்வாகிகள் ஒருபுறம் வந்து சேரும் வகையில், அவர்களுக்கு கட்சி பதவி ஒருபுறம் என்பதனை உண்மையாகவே அ.தி.மு.க கட்சியில் இருந்து வருபவர்களுக்கு கட்சி வேலைப்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே கட்சியில் இருந்து பொறுப்புகளில் இருந்தவர்கள், கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றால் உடனே, அக்கட்சி நிர்வாகிகள் பலரையும் விரக்தியில் ஆழ்த்த பல்வேறு செயல்களை செய்து வருவதற்கு உதாரணம் தான் கரூரில் நடந்தேறியுள்ளது. கரூர் மாவட்டம், கரூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் என்ஜினியர் கமலக்கண்ணன்., நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 5 ஆயிரம் வாக்குகள் சீட்டான, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக, வேட்டமங்கலம் அ.தி.மு.க கிளை செயலாளர் மணிவேல் என்பவர் போட்டியிட விருப்ப மனு தெரிவித்த நிலையில், கரூர் மேற்கு ஒன்றிய செயலாளரான பொறியாளர் கமலக்கண்ணன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
மேலும் இவருக்கு பதில் மாற்றுக்கட்சியிலிருந்து வந்த ராஜலெட்சுமி என்ற பெண்ணுக்கு சீட் கொடுத்து ஜெயிக்க வைத்த கமலக்கண்ணன், அதே தேர்தலில் மேற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணனுக்கும் மாவட்ட கவுன்சிலராக சீட்டு கிடைத்தது. இந்நிலையில் வேட்டமங்கலம், கமலக்கண்ணனின் சொந்த ஊரான கோம்புபாளையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் அதிமுக வில் ஒன்றிய கவுன்சிலர் பதவி ஜெயித்து விட்டு, இவர் போட்டியிட்ட மாவட்ட கவுன்சிலர் பதவி ஜெயிக்க முடியவில்லை. கமலக்கண்ணன் தோற்றதிலிருந்தே, அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளிடையே பாகுபாடி காட்டி வருவதும், கட்சியின் அடிப்படை தொண்டர்களை ஒரம் கட்டி வரும் நிலை தான் இவர் தோற்றதற்கு காரணம் என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்
ஆனால் இந்நிலையில்,. கரூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பொறியாளர் அவருடைய செயல் அ.தி.மு.க நிர்வாகிகளிடையே பாரபட்சம் காட்டி வருவதாக ஏற்னவெ அடுக்கடுக்கான குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது கரூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட, வேட்டமங்கலம் கிளை செயலாளர் மணிவேல் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோருக்குமிடையே எந்த வித முன் விரோதமும் இல்லாத நிலையில் கரூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் மாற வேண்டும், என்றும் என் சாவுக்கு காரணம் கமலக்கண்ணன் மட்டுமே என்றும், கட்சி வளரனும் என்று இறுதியாக வேட்டமங்கலம் கிளை செயலாளர் மணிவேல் என்பவர் வேட்டமங்கலம் அ.தி.மு.க என்ற வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டு விட்டு தென்னைமரத்திற்கு வைத்திருக்கும் குருணை மருந்தினை சாப்பிட்டு விட்டு, கரூர் நகரில் கோவை சாலையில் உள்ள செந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தற்போது உயிர் ஊசலாடி வரும் உண்மையான அ.தி.மு.க தொண்டரும், வேட்டமங்கலம் அ.தி.மு.க கிளை செயலாளருமான மணிவேலின் இந்த முடிவு உண்மையான அ.தி.மு.க வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மணிவேல் என்பவருடைய மனைவி வேட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் இயக்குநராகவும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது