திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 2 ஜனவரி 2019 (19:29 IST)

டோக்கன் விலை ஏறிருச்சு டோய்...? தினகரனின் திருவாரூர் ப்ளான் ரெடி!

டோக்கனை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திற முடியாது அதுவும் குறிப்பாக ஆர்.கே.நகர் தொகுதி மக்கள். இப்போது இதே டோக்கன் ஃபார்மூலாவை திருவாரூர் இடைத்தேர்தலில் பௌஅனப்டுத்த உள்ளாராம் தினகரன். 
 
ஆம், பல தொகுதிகள் இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் சமயத்தில் திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28 ஆம் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
நாளை முதல் வேட்புமனு தாக்கல் துவங்கவுள்ள நிலையில் கஜா புயலினால திருவாரூர் பாதிக்கப்பட்டுள்ளதாக கார்னம் காட்டி அங்கு தேர்தலை ஒத்தி வைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் விசாரணை நாளை நடைபெறவுள்ளது. 
 
இந்நிலையில், திருவாரூரில் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என குழப்பம் இருந்தாலும் தினகரனின் அமமுக கட்சி டோக்கன் ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளனர். அதாவது நெருங்கிய வட்டார தகவலின் படி 50 ரூபாய் டோக்கன் வழங்கப்பட உள்ளதாம்.
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து ஆளும் கட்சியையும், எதிர் கட்சியையும் அலற விட்ட தினகரன் இப்போது 50 ரூபாய் டோக்கன் வைத்து திட்டம் போட்டு வருகிறாராம். 
 
பார்ப்போம் ஆர்.கே.நகரில் வொர்க் அவுட் ஆனது திருவாரூரில் ஆகிறதா என்று...