வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 2 ஜனவரி 2019 (17:25 IST)

தாடியோடு திரியும் தினகரன்: சோகத்தின் பின்னணி என்ன?

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்ததை அடுத்து அவரின் தொகுதியான திருவாரூர் காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. 
 
இதையடுத்து அந்த தொகுதிக்கு இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இந்நிலையில், மழு மழுவென க்ளீன் சேவ்வாக இருக்கும் தினகரன் இன்று நரை தாடியுடன் காணப்பட்டார். இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதற்கு தினகரன் வந்திருந்தார். அப்போதுதான் இந்த விவரங்கள் எல்லாம் கவனிக்கப்பட்டது. 
 
எப்போதும் போல தினகரனின் சார்ப் பேச்சும் மிஸ்ஸிங். தேர்தல் சுறுசுறுப்பே அவரிடம் காணப்படவில்லை. ஒருவேளை செந்தில் பாலாஜி சென்றது, தேர்தல் அறிவிப்பு வந்தது இவை அனைத்தும் அவரை பாதித்துள்ளதோ என தெரிவில்லை. 
 
இதற்கு முன்னர் இடைத்தேர்தல் இப்போதைக்கு நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் மழையை காரணம் காட்டிய போது கோபப்பட்ட தினகரன் இப்போது சைலண்டாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை.