அடடே! அடுத்த எம்.ஜி.ஆர் - வைரல் புகைப்படம்
அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவித்துள்ள டிடிவி பாஸ்கரனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து வருகிறது. பல புதிய கட்சிகள் முளைத்துக்கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தரப்பிற்கு எதிராக டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அவருக்கும், சசிகலாவின் சகோதரருமான திவாகரனுக்கும் இடையே மோதல் எழுந்தது. அதையடுத்து, தினகரனுக்கு எதிராக அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை திவாகரன் தொடங்கினார்.
இந்நிலையில், சசிகலா குடும்பத்தில் 3வது நபர் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல. டிடிவி தினகரனின் உடன் பிறந்த சகோதரர் டிடிவி பாஸ்கரன். இவர் ஓரிரு சினிமாவிலும் நடித்துள்ளார்.
விரைவில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிப்பேன் என பாஸ்கரன் கூறியுள்ளார். ஜெ.வின் வழியில் நான் என தினகரனும், எம்.ஜி.ஆர் வழியில் நான் என திவாகரனும் கூறியுள்ள நிலையில், எம்.ஜி.ஆரின் தொண்டர்களுக்காக நான் என டிடிவி பாஸ்கரன் கூறியுள்ளார்.மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தஞ்சை அல்லது ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவேன் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மின்னும் தக தக ஆடை மற்றும் கருப்பு கண்ணாடி அணிந்து வயதான பாட்டிகள் புடை சூழ எம்.ஜி.ஆர் போல் அவர் போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.